முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “மாமன்னன்” திரைப்படம் சுத்த ப்ளாப் படம் என்றும், அந்த படத்தை திமுகவினர் மட்டுமே பார்க்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
நேற்று மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த “மாமன்னன்” திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. படம் சூப்பராக இருப்பதாக ஒரு சிலரும் சுமாராக இருப்பதாக பலரும் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் படம் வெளியான முதல் நாள்: ரூபாய் ஆறு கோடி ரூபாய் தமிழகத்தில் மட்டும் வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்து பல்வேறு அரசியல்வாதிகள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “படம் சுத்த பிளாப், இந்த படத்தை திமுகவினர் மட்டுமே பார்த்து வருகின்றனர், இந்த படம் நூறாண்டு திரைப்படம் என்று அவர்களே போற்றிக் கொள்ள வேண்டியதுதான்” என்று அவர் கூறியுள்ளார்.