இயக்குனர் மாரி செல்வராஜ் யோகி பாபுவை வைத்து நிச்சயம் படம் இயக்குவேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் யோகி பாபுவின் நடிப்பில் “பொம்மைநாயகி” திரைப்படத்தை பா ரஞ்சித் தயாரித்துள்ளார். இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்து வருகிறது. அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இப்போது ஐந்துக்கும் மேற்பட்ட படங்கள் உருவாகி வருகின்றன. அதில் ஒன்றாக யோகி பாபு நடிக்கும் “பொம்மைநாயகி” படமும் உள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் கலந்துகொண்டார். அப்போது அவர் “மானுடம் தொடர்பான கதைகளை எடுக்க இயக்குனர்கள் ஆர்வமாக இருந்தாலும், தயாரிப்பாளர்கள் ஒத்துக் கொள்வார்களா என்ற அச்சம் உள்ளது. ஆனால் நீலம் புரொடக்ஷன்ஸ் போன்ற நிறுவனங்கள் என்று நினைப்பதே தமிழ் சினிமாவின் வெற்றிதான். “பொம்மை நாயகி” கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும். எளிய மனிதர்களை பிரதிபலிப்பதுதான் யோகி பாபுவின் முகம். அவரை வைத்து கண்டிப்பாக படம் இயக்குவேன்” எனக் கூறினார்.