மார்க் ஆண்டனி தயாரிப்பாளரின் படத்தில் ஆர்யா!

Filed under: சினிமா |

கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு ரிலீஸ் ஆனத் திரைப்படம் “மார்க் ஆண்டனி”.

இப்படத்தை மினி ஸ்டியோஸ் சார்பாக வினோத் தயாரிக்க, ஜி வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படம் சோலாவாக ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. தற்போது தயாரிப்பாளர் வினோத்குமார் தயாரிக்கும் அடுத்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கிறார். படத்தை ஜியென் கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கவுள்ளார். இவர் ஆர் ஜே பாலாஜி நடித்த “ரன் பேபி ரன்” படத்தை இயக்கியவர். இந்த படத்துக்கான கதையை “லூசிபர்” படத்தின் எழுத்தாளரான முரளி கோபி எழுதுகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் பூஜையோடு நேற்று தொடங்கியது.