மார்ச் 31ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் அன்றைய தினம் வங்கிகள் செயல்படும். ஆனால் இந்தாண்டு மார்ச் 31ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதையடுத்து அன்றைய தினம் வங்கிகள் செயல்படுமா என்ற கேள்வி பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் எழுந்தது.

இது குறித்து ரிசர்வ் வங்கி அளித்துள்ள விளக்கத்தில், “மார்ச் 31ம் தேதி ஞாயிறன்று அனைத்து வங்கிகளும் செயல்படும். இந்த நிதியாண்டின் இறுதி நாள் என்பதால் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அனைத்து வங்கிகளும் திறந்திருக்கும்” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மேலும் மார்ச் 31-ம் தேதி வங்கிகள் இயங்கும் என்பதை பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தவும் அனைத்து வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
Related posts:
தீபாவளிக்கு சிறப்பு ரயில்கள் அறிவித்தது தெற்கு ரயில்வே: நாளை முன்பதிவு தொடக்கம் !
பள்ளிகள் திறப்பதை விட மாணவர்களின் உயிர்தான் முக்கியம் - அமைச்சர் செங்கோட்டையன்!
ஜெயலலிதா பற்றி தவறான கருத்தை ஆ.ராசா எப்படி சொல்லலாம்...-வழக்கறிஞர் ஜோதி
நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டாய இணையவழி பதிவு முறையை ரத்து செய்க - சீமான்!



