மடோன் அஸ்வின் இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து வரும் “மாவீரன்” திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
“டாக்டர்” மற்றும் “டான்” திரைப்படங்களின் வெற்றிக்குப்பின் தற்போது மடோன் அஸ்வின் இயக்கும் “மாவீரன்” படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குனர் மிஷ்கின் நடிக்கவுள்ளார். ஹீரோயினாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கிறார். படத்தின் ஷூட்டிங் இப்போது நடந்து வரும் நிலையில் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை சிவகார்த்திகேயனின் படங்களுக்கு இல்லாத அளவுக்கு இந்த படத்துக்காக வியாபாரம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. நவம்பர் மாதத்தில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. பின் தயாரிப்பு வேலைகள் முடிந்து மே மாதம் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இந்த வருடம் சிவகார்த்திகேயனின் “டான்” திரைப்படம் மே 13ம் தேதி ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றதையடுத்து அடுத்த ஆண்டு மே 13ம் தேதி “மாவீரன்” ரிலீஸ் ஆக வேண்டும் என சிவகார்த்திகேயன் விரும்புகிறாராம்.