நாளை முதல் மாஸ்க் போடவில்லை எனில் ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயின் பாதிப்புகள் கடந்த சில காலமாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. தினசரி பாதிப்புகள் 2500ஐ தாண்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்புகள் 1000க்கும் மேல் பதிவாகியுள்ளது. ஆகவே, சென்னையில் நாளை முதல் பொது இடங்களில் மாஸ்க் கண்டிப்பாக போட வேண்டும். அப்படி போடாவிடில் ரூ.500 அபராதமாக விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.