மிரட்டும் ஆன்லைன்கள் மீது புகாரளிக்கலாம்!

Filed under: தமிழகம் |

ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய பின் அதை கேட்டு மிரட்டுவது தொடர்பாகவும் புகாரளிக்கலாம் என்று போலீசார் தகவலளித்துள்ளனர்.

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஆன்லைனின் வாங்கிய கடனை திருப்பி செலுத்தியபோதிலும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததால் போலீசில் புகாரளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பெரியபுதூர் அருண் நகரில் வசித்து வரும் உனிஷ்பாட்சா கிஷ்ட், ஸ் ஈட், க்ளவுட் உட்பட்ட செயலிகள் மூலம் ரூ.10 லட்சம் கடன் பெற்றுள்ளார். அப்பணத்தைத் திரும்பச் செலுத்தியிருந்தார். ஆனால், மீண்டும் ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டுமென அந்த செயலி நிறுவனம் அவரை வற்புறுத்தியுள்ளது. அவரது புகைப்படங்களை மார்பிங் செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளனர். இதுகுறித்து, உனிஷ்பாட்ஷா சைபர் கிரைம் போலீசில் புகாரளித்துள்ளார். இதையடுத்து அந்தச் செயலி நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கந்து வட்டி கேட்டு மிரட்டும் செயலிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் புகாரளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.