“சுமோ” என்ற திரைப்படம் உருவாகி சில ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் கிடப்பிலேயே போடப்பட்டுள்ளது.
“சுமோ” இத்திரைப்படம் இது முழுக்க முழுக்க சுமோக்களின் வாழ்க்கையை மையப்படுத்தியும், குழந்தைகளுக்காகவும் உருவாக்கப்பட்ட காமெடி கலந்த செண்டிமெண்ட் படமாக உருவாக்கப்பட்டது. இத்திரைப்படத்தில் மிர்ச்சி சிவா ஹீரோவாக நடித்துள்ளார். “வணக்கம் சென்னை” படத்திற்கு பிறகு பிரியா ஆனந்த் இரண்டாவது முறையாக இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரமொன்றில் ஜப்பானைச் சேர்ந்த முன்னாள் சுமோ மல்யுத்த வீரர் யோசினோரி தாஷிரோ நடித்துள்ளார். இப்படத்திற்கு நடிகர் சிவாவே திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தை முதலில் விடிவி கணேஷ் தயாரிக்க ஆரம்பித்தார். பின்னர் அப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றி முடித்தது. நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் இப்போது அப்படத்தை மீண்டும் விடிவி கணேஷே கைப்பற்றி வெளியிட உள்ளாராம். ஆனால் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதுவும் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இப்போது படத்தை தூசுதட்டி ரிலீஸ் வேலைகளை செய்து வருகிறார்களாம். விரைவில் படம் சென்சாருக்கு அனுப்பப்பட உள்ளதாகவும், சென்சார் முடிந்ததும் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.