மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர்!

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

கடந்த சில வாரங்களிலேயே நான்கு முறை பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்துள்ளார். மீண்டும் ஒரு முறை தமிழகத்திற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழகத்தில் குறிப்பிட்டதக்க தொகுதிகளில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அடிக்கடி தமிழகத்திற்கு பிரதமர் மோடி வருகிறார் என்று கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாக நடந்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் பாதயாத்திரை வரும் 18ம் தேதி நிறைவு பெறுகிறது. இந்நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வரும் 18ம் தேதி தமிழகம் வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை நிறைவு விழாவில் அவர் பங்கேற்கிறார். அதன் பின் அவர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.