மீண்டும் ஷூட்டிங் செல்லும் தங்கலான் படக்குழு?

Filed under: சினிமா |

“தங்கலான்” திரைப்படம் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவருகிறது. படத்தில் விக்ரம், பார்வதி, பசுபதி மற்றும் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் கதைக்களம் கோலார் தங்க வயலை மையப்படுத்தி உருவாக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நவம்பர் 1ம் தேதியன்று இரவு 7 மணிக்கு “தங்கலான்” படத்தின் டீசர் வெளியாகும் என்று படத்தின் ரிலீஸ் ஜனவரி 26ம் தேதி என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் ஷூட்டிங் மொத்தமாக முடிந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இப்போது மீண்டும் ஐந்து நாட்கள் ஷூட்டிங் நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. கேஜிஎப் பகுதிகளில் விக்ரம்மை வைத்து சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.