முடங்கிய எக்ஸ் தளம்!

Filed under: உலகம் |

எக்ஸ் சமூக வலைதளம் உலகின் முன்னணியில் ஒன்றாக உள்ளது. இந்த சோசியல் மீடியா திடீரென என சிறிது நேரம் முடங்கியதால் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

டுவிட்டர் என்று கூறப்பட்ட சமூக வலைதளமான ‘எக்ஸ்’ சமூக வலைதளம் சில மணி நேரங்களுக்கு முன்னால் திடீரென முடங்கியது. இதனால் உலகம் முழுதும் அதன் பயனாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். அரசியல் தலைவர்கள் முதல் சினிமா நட்சத்திரங்கள் வரை அதிகம் பயன்படுத்தும் ‘எக்ஸ்’ தளம் திடீரென முடங்கியதால் பொதுமக்கள் ஸ்தம்பித்து போயினர். சுமார் 20 நிமிடங்கள் வரை செயல்படாமல் இருந்த ‘எக்ஸ்’ தளம் தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. கடந்த சில நாட்களாக அடிக்கடி ‘எக்ஸ்’ வலைதளம் முடங்குவது பயனாளர்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.