முதலமைச்சர் டுவீட் நீக்கப்பட்டது ஏன்?

Filed under: அரசியல்,தமிழகம் |

இந்திய ராணுவம் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃபுளோராவுக்கு வாழ்த்து செய்தியில் டுவிட்டரில் பதிவிட்டிருந்தது.

நேற்று ஃபுளோராவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்ததை அடுத்து, அந்த டுவிட்டை இந்திய ராணுவம் நீக்கியது. இதுகுறித்து திமுக எம்பி கனிமொழி, தனது டுவிட்டரில், “தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை இந்திய ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்திய ராணுவம் இதுகுறித்து அளித்துள்ள விளக்கத்தில், “இந்த விளக்கத்தில் ராணுவ தலைமையகம் வாழ்த்து தெரிவிப்பதற்கு முன்னதாக வடக்கு மண்டலம் வாழ்த்து தெரிவித்து டுவிட் செய்ததால், பதிவை நீக்கியுள்ளது.” இவ்வாறாக இந்திய ராணுவம் தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் இதுகுறித்து தனது டுவிட்டரில், ‘பெண்களால் முன்னேறக் கூடும் – நம் வண்தமிழ் நாடும் எந்நாடும்!” என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.