எடப்பாடி பழனிசாமி போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க திராணியில்லையேல் முதலமைச்சர் பதவியிலிருந்து ஸ்டாலின் விலக வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் குறித்து விவாதிக்க அனுமதி அளிக்கவில்லை என கூறி அதிமுக இன்று வெளிநடப்பு செய்தது. போதை பொருள் விவகாரத்தில் ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளபக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி, “நேற்று தூத்துக்குடியில் 8 கிலோ மெத்தபெட்டமைன் எனும் போதைப்பொருள் சிக்கியுள்ளதாக வரும் செய்திகள், இந்த விடியா திமுக ஆட்சியில் போதைப்பொருட்கள் புரையோடிப் போயுள்ளதை மெய்ப்பிக்கின்றன. கள்ளச்சாராயம், கஞ்சா, சிந்தெடிக் போதைப்பொருட்கள்- இவை தான் ஸ்டாலின் தலைமையிலான விடியா திமுக அரசு தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ள புதிய அடையாளங்கள். இனியும் இதே மெத்தனத்தில் இந்த விடியா அரசு இருப்பின், கள்ளக்குறிச்சி மரணங்கள் தொடர்கதையாகிவிடும் அவலத்திலே போய் நின்றுவிடும் என்றும் போதைப்பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க திராணியில்லையேல் ஸ்டாலின் பதவி விலக வேண்டும்” என்று பதவிட்டுள்ளார்.