முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரயிலில் பயணம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

கடந்த ஆண்டு மே மாதம் தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்ட பின் முதல் முறையாக இன்று அவர் ரயிலில் பயணம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் தென்காசி செல்ல உள்ளதாகவும், தென்காசியில் நடைபெறும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்காசி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு அவர் அதன்பின் மதுரை செல்ல உள்ளார் என்றும், மதுரை நிகழ்ச்சிகள் முடித்த பின் அவர் சென்னை திரும்புவார் என்றும் முதலமைச்சர் வட்டாரங்கள் கூறியுள்ளன.