சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் அதிகனமழை காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதங்களை சீர் செய்திட இடைக்கால நிவாரணமாக ரூ.5060 கோடி பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். மிக்ஜாம் புயல் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமரை சந்திக்க நேரம் கோரியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும், டில்லியில் நாளை நடைபெறும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க கோவையிலிருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறப்பட்டார்.