உயர்கல்வித்துறை தமிழ்நாட்டிலுள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது என்பது குறித்து அறிவிப்பை தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்து வந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கை பணிகள் தொடங்கியது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை வரும் ஜூன் 30-ம் தேதி வரை நடைபெறும் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூலை 3ம் தேதி தொடங்கும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கல்லூரிகளில் மொத்தமுள்ள 1,07,299 இடங்களில் 75,811 மாணவர்கள் சேர்ந்துள்ளதாக உயர்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.