முதல்வருக்கு பல கெட்டப்புகளில் பேனர்!

Filed under: அரசியல்,புதுச்சேரி |

பல்வேறு சினிமா கெட்டப்புகளில் புதுச்சேரி யூனியனின் முதலமைச்சர் என்.ஆர்.ரங்கசாமியின் பிறந்த நாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அவருக்கு பேனர் வைத்துள்ளனர்.

கடந்த 2021ம் ஆண்டு புதுச்சேரி யூனியனின் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ்- பாஜக கூட்டணி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இன்று முதலமைச்சர் ரங்கசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது கட்சி ஆதரவாளர்கள் புதுச்சேரியில் “பத்து தல” படத்தில் சிம்பு நடித்த ஏஜிஆர் முதல், புஷ்பா, சந்திரமுகி வேட்டையன் ராஜா வரை பல கெட்டப்புகளில் அவரது புகைப்படத்தை மார்பிங் செய்து அவருகு பேனர் வைத்துள்ளனர். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.