முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பள்ளி குழந்தைகளுக்கு உப்புமா, சிறை கைதிகளுக்கு சிக்கன்: இதுதான் திராவிட மாடலா? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் நேற்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி ஒன்றின் போது, “திமுக எப்போது வீட்டுக்கு போகும் என்று மக்கள் எண்ண தொடங்கிவிட்டனர். எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சர் ஆனால் தான் தமிழ்நாட்டுக்கு உண்மையான விடியல் கிடைக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதாக முதலமைச்சர் கூறிய நிலையில் திமுக அரசு சத்து இல்லாத உப்புமா கிச்சடி போன்ற உணவுகளை தருகிறது. ஆனால் சிறைகைதிகளுக்கு சிக்கன், முட்டை என விதவிதமான உணவு வழங்குகிறார்கள், இதுதான் திராவிட மாடலா? இந்த ஆட்சியில் தவறு செய்பவர்கள்தான் நன்றாக இருக்கிறார்கள். கள்ளச்சாராயம் காயச்சியவர்களுக்கு நிவாரணம் தந்த அரசுதானே இது” என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.