நீதிமன்றம்அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டது செல்லும் என உத்தரவிட்டுள்ளது. ஓபிஎஸ் உட்பட அவரது அணியினர் அதிமுக கொடி மற்றும் கரையை பயன்படுத்தக்கூடாது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொது குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க கூறி ஓபிஎஸ் தரப்பு தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவர் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அதிமுக கொடி மற்றும் கரை வேட்டியை ஓபிஎஸ் அணியினர் பயன்படுத்தக்கூடாது என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். அதிமுக கொடி மற்றும் கரையை பயன்படுத்துவார்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.