முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினை குறித்து விமர்சனம்

Filed under: அரசியல்,தமிழகம் |

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் “பொய் பேசுவதில் ஆஸ்கார் அவார்டு கொடுக்க வேண்டும் என்றால் அது ஸ்டாலின் அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும்” என பேசியுள்ளார்.

அவர் இதுகுறித்து பேசும்போது, “கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல், வாக்குறுதிகளை 100% நிறைவேற்றி விட்டோம் என்று முதலமைச்சர் கூறுகிறார். மக்கள் என்ன நினைப்பார்கள் என்பதை கொஞ்சம் கூட கவலை இல்லாமல் வாய்க்கு வந்தபடி இஷ்டப்படி நூறு சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று பொய் பேசுகிறார். இது தமிழ்நாட்டின் மக்களின் காதில் பூ சுற்றுவதை தான் குறிக்கிறது. திமுக கொடுத்த பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நீட் தேர்வை ஒரே கையெழுத்தில் நீக்குவோம் என்று சொல்லி தற்போது மக்களுக்கு நாமத்தை போட்டு விட்டார்கள். எல்லா ரேஷன் கார்டுகளுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்லிவிட்டு தற்போது தகுதி வாய்ந்த பெண்களுக்கு மட்டும் கொடுப்போம் என்று கூறியுள்ளனர். தற்போது ஒரு கோடி பேருக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்ததாக கூறுகின்றனர். இந்த ஆயிரம் ரூபாய் கூட பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு கொடுப்பார்களா என்பது சந்தேகமே. 234 தொகுதிகளிலும் புகார் பெட்டி வைப்பேன் என்றும் அதில் உள்ள அனைத்து கடிதங்களையும் நானே படித்து தீர்வு காண்பேன் என்றும் முதலமைச்சர் கூறினார், அது என்ன ஆச்சு?” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.