முன்னாள் டிஜிபியின் திடுக்கிடும் புகார்!

Filed under: தமிழகம் |

சமூக வலைதளங்களில் முன்னாள் டிஜிபி ரவி பெயரில் போலி ஐடி உருவாக்கி ஆசாமிகள் மோசடி செயலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்கள் பலரும் சமூக வலைதளங்களில் கணக்குகள் வைத்துள்ளனர். அவர்களது பெயரில் புகைப்படங்களை பயன்படுத்தி போலி ஐடிக்களை உருவாக்கி நடைபெறும் சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறாக போலி ஐடி உருவாக்கும் ஆசாமிகள் ஒரிஜினல் ஐடியில் உள்ளவருடன் நட்பில் உள்ளவர்களிடம் அவர்களை போன்றே தொடர்பு கொண்டு பேசி பண மோசடி செயல்களில் ஈடுபடுவதாக புகார்கள் உள்ளது. பொதுமக்களை தாண்டி தற்போது முன்னாள் டிஜிபியையே இந்த மோசடி கும்பல் பாதித்துள்ளது. தமிழக முன்னாள் டிஜிபி ரவி பெயரில் அவரது புகைப்படத்தை கொண்டே மர்ம கும்பல் ஒன்று போலி ஐடி உருவாக்கியுள்ளது. அதன்மூலம் டிஜிபி ரவிக்கு தெரிந்த நண்பர் ஒருவரிடம் இருந்து பர்னிச்சர் பொருட்களையும் அவர்கள் வாங்கியதாக தெரிய வந்துள்ளது. இதுகுறித்து முன்னாள் டிஜிபி ரவி சைபர் கிரைம் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.