முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் ரஜினிகாந்த்வுடன் சந்திப்பு

Filed under: அரசியல்,சினிமா |

நடிகர் ரஜினிகாந்தை அவரது இல்லத்தில் இன்று அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் நேரில் சந்தித்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டு, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அதிமுகவில் இருந்து நீக்கிய சிறப்பு தீர்மானத்திற்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. ஏற்கனவே அமமுக பொதுச்செயலாளர் தினகரனுடன் இணைந்து அரசியலில் பயணிக்கப் போவதாக ஓபிஎஸ் அறிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பினால், அவர் தினகரன் மற்றும் சசிகலாவுடன் இணைந்து அரசியலில் இணைந்து பணியாற்றுவாரா? அல்லது தினகரனைப் போல் தனிக்கட்சி ஆரம்பிப்பாரா? என கேள்வி எழுந்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து பேசினார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு எனத் தகவல் வெளியாகி உள்ளது.