ஏ ஆர் முருகதாஸ், “தர்பார்” தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்தார். இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இப்படத்தின் ஷூட்டிங் நேற்று முன்தினம் சென்னையில் பூஜையோடு தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படத்தின் ஷூட்டிங் கடந்த வாரம் சில நாட்கள் தொடங்கியது. அடுத்த கட்ட ஷூட்டிங் தற்போது வி.ஐ.டி. கல்லூரியில் நடந்து வருகிறது. சிவகார்த்திகேயன் மற்றும் முருகதாஸ் இணைந்துள்ளதால் இந்த படத்தின் பட்ஜெட் 70 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. இப்போது விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்து வருகிறது. இப்படத்தில் தன்னுடைய நடிப்பு வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிப்புக்காக தனிப்பயிற்சியாளர் ஒருவரை நியமித்துள்ளாராம் சிவகார்த்திகேயன். ஒவ்வொரு காட்சிக்கும் முன்பு அவரிடம் ஆலோசனை பெற்று நடித்து வருகிறாராம். முன்னதாக விஜய் சேதுபதியும் தன்னுடைய படங்களில் நடிப்புப் பயிற்சியாளராக பூஜா தேவாரியா என்பவரை நியமித்திருந்தார்.