முருகன் மாநாடு குறித்து வானதி சீனிவாசன் விமர்சனம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

முருகன் மாநாடு தமிழக அரசின் சார்பில் சமீபத்தில் நடத்தியது. இதுகுறித்து வானதி சீனிவாசன் தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை ஏமாற்றவே முருகன் மாநாடு நடத்தப்பட்டதாக கூறியியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

சமீபத்தில் பழனியில் முருகன் மாநாடு தமிழக அரசு நடத்தியது. இம்மாநாடு மிகச் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. குறிப்பாக திமுகவின் கூட்டணி கட்சிகள் கூட சனாதன ஒழிப்பு கொள்கையை கைவிட்டு ஆன்மீக பாதையில் திமுக செல்வதாக விமர்சனம் செய்யப்பட்டது. வானதி சீனிவாசன் இது குறித்து, “மக்களை ஏமாற்றுவதற்காக முருகன் மாநாடு நடத்தப்பட்டது. ஆன்மீக உணர்வுகளை புரிந்து கொள்ளாத திமுக சனாதான ஒழிப்பு மாநாடு ஒரு பக்கம் இளைஞர் தலைவரை வைத்து நடத்திவிட்டு இன்னொரு பக்கம் அமைச்சரை வைத்து முருகன் மாநாடு நடத்துகிறது. இதில் என்ன அர்த்தம் இருக்கிறது? அனைத்து மதத்தையும் திமுக சமமாக நடத்தவில்லை. மக்களை ஏமாற்ற திமுக போடும் நாடகம் தான் முருகன் மாநாடு. சொல்லப் போனால் மக்களிடம் ஏற்படும் மாற்றத்தை திமுக புரிந்துகொள்ள ஆரம்பித்து உள்ளது. முருகன் மாநாடு நடத்தியது போல் சிவன் மாநாடு, ஆஞ்சநேயர் மாநாடு நடத்தட்டும், மக்கள் திமுகவை நம்ப மாட்டார்கள்” என்று அவர் கூறினார்.