தெலுங்கான மாநிலத்தில் மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பைத் தொட்டியில் விவசாயிகள் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தக்காளி விலை உயர்ந்து கொண்டே வருவதை அடுத்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தக்காளியை ஒரு சில விவசாயிகள் பதுக்கி வைத்திருந்ததாகவும் ஆனால் கவனிக்காமல் விடப்பட்டதை அடுத்து அந்த தக்காளிகள் அனைத்தும் அழுகி விட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வேறு வழியின்றி மூட்டை மூட்டையாக தக்காளியை குப்பை தொட்டியிலும் கால்நடைகளுக்கு உணவாகவும் போட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அழுகிய தக்காளிகள் மூட்டை மூட்டையாக குப்பையிலிருந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.