மூத்த தலைவர்களின் திடீர் செல்பி!

Filed under: அரசியல் |

எதிர் எதிர் துருவங்களான கார்த்தி சிதம்பரம் மற்றும் அண்ணாமலையும் திடீரென சந்தித்து செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் சிவகங்கை எம்பியான கார்த்தி சிதம்பரமும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் தேசிய அரசியல் முதல் மாநில அரசியல் வரை எதிர் கட்சியாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் சில நேரங்களில் இருகட்சி தலைவர்களும் சந்தித்துக் கொள்கிறார்கள். தற்போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, காங்கிரஸ் கட்சியின் எம்பியாக கார்த்தி சிதம்பரம் இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட செல்பி போட்டோ இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செல்போனில் செல்பி எடுக்க கார்த்தி சிதம்பரம் எம்பி, திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு ஆகியோர் போட்டோவில் உள்ளனர். இந்த புகைப்படத்தை திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில், “இருதுருவங்களுடன் கோவை விமான பயணம்” என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் தான் அண்ணாமலை & -கார்த்தி சிதம்பரம் ஆகியோர் சந்தித்து செல்பி எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது.