மூன்று கோவில்களில் நாள்முழுதும் அன்னதானம்!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழ்நாட்டில் உள்ள மூன்று முக்கியமான கோவில்களான ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், மதுரை மீனாட்சி கோவில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகிய கோவில்களில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருக்கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதான திட்டம். தற்போது இத்திட்டத்தில் 754 கோவில்களில் மதியவேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. ஸ்ரீரங்கம், பழனி கோவில்களில் நாள் முழுதும் அன்னதான திட்டம் வழங்கப்பட்டு வருகிறது. திருச்செந்தூர் மற்றும் சமயபுரம், திருத்தணி ஆகிய கோவில்களிலும் நாள் முழுதும் அன்னதான திட்டத்தை கடந்த 16.0.2021ம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

2022&2023ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின் போது, “திருவண்ணமாலை, மீனாட்சியம்மன் கோவில், ராமேஸ்வரம் ஆகிய கோவில்களில் நாள் முழுதும் அன்னதானம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் இக்கோவில்களில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் அன்னதானம் வழங்கப்படும். இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் பயனடைவார்கள்.