மேகதாது அணை குறித்து திமுகவுக்கு அண்ணாமலை கேள்வி!

Filed under: அரசியல்,தமிழகம் |

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை கண்முன்னே பறிபோய் கொண்டிருக்கும் நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும், “எல்லா பிரச்சினைகளுக்கும் மத்திய அரசை குறை கூறுவதை ஏற்க முடியாது, பிற மாநிலங்களைவிட தமிழகத்தில் பணவீக்கம் அதிகரித்து காணப்படுகிறது, பணவீக்கம் அதிகரிக்க தமிழக அரசின் நடவடிக்கையே காரணம். உணவு பொருள் தொடர்பான பணவீக்கம் அதிகரிக்க காரணம் என்ன? என்பதை திமுக அரசு விளக்க வேண்டும்” என்று அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.