மேட்டாவிலிருந்து 13 சதவீதம் ஊழியர்கள் பணி நீக்கம்!

Filed under: உலகம் |

13% ஊழியர்களை பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவிலிருந்து பணி நீக்கம் செய்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக் உலக நாடுகளில் சமூக வலைதளங்களில் முன்னணியில் உள்ளது. உலகில் பல நாடுகளிலிருந்து பல கோடி மக்கள் நட்பாகிக் கொள்ளும் வசதி பேஸ்புக்கில் உள்ளது. இதில், உலக நாடுகளின் தலைவர்கள் முதற்கொண்டு சாதாரண மக்கள் வரை அனைவரும் தங்களின் கருத்துகள் பதிவிடும் தளமாக இது பார்க்கப்படுகிறது. சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க் டுவிட்டர் சி.இ.ஓ, நிதி அதிகாரி உட்பட பல ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது அதிர்ச்சியளித்தது. இந்நிலையில், பேஸ்புக், வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனத்தில் 11 ஆயிரம் ஊழியர்களை இன்று பணி நீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.