மோடி, ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு!

Filed under: அரசியல்,இந்தியா |

தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை மீறியதற்கு விளக்கமளிக்க வேண்டும் என பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ஆகிய இருவரிடமும் விளக்கம் கேட்டு உத்தரவிட்டுள்ளது.

பிரதமர் மோடி பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக தேர்தல் பிரச்சாரத்தில் பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தியும் பிரிவினை குறித்து பேசியதாக பாரதிய ஜனதாவும் மாறி மாறி தேர்தல் ஆணையத்தில் புகாரளித்துள்ளன. இப்புகாரின் அடிப்படையில் ஏப்ரல் 29ம் தேதி காலை 11 மணிக்குள் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகிய இருவருக்கும் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தலைவர்களின் பேச்சு கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பதால் தேர்தல் பிரச்சாரத்தின் போது மிகுந்த கவனமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.