யூடியூப் சேனல்களுக்கு மயில்சாமி மகன் எச்சரிக்கை!

Filed under: சினிமா |

நடிகர் மயில்சாமி இறப்பு குறித்த வதந்தியை பரப்பி வரும் யூடியூப் சேனல்களை எச்சரித்துள்ளார் அவரது மூத்த மகன்.

மயில்சாமியின் மூத்த மகன் நடிகர் மயில்சாமி இறப்பு குறித்து ஆதாரமில்லாத அவதூறு கருத்துக்களை பரப்பினால் யூடியூப் சேனல்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளார். நடிகர் மயில்சாமி கடந்த சில நாட்களுக்கு முன்னால் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர்களை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல நடிகர்களும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தனர். இந்நிலையில் மயில்சாமி மரணம் குறித்து சில சர்ச்சைக்குறிய கருத்துக்களை யூடியூப் சேனல்களில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இக்கருத்துக்கள் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மயில்சாமி மகன் இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மயில் சாமியின் மூத்த மகன் எங்களது “அன்பு அப்பா மயில்சாமி குடிப்பதை நிறுத்திவிட்டார், தயவுசெய்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம், தவறான செயல்களை பரப்பினால் யூடியூப் சேனல்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.