யூடியூப் பக்கத்தில் ரிலீஸான “ஹேராம்!”

Filed under: சினிமா |

2000ம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நடித்து தயாரித்த திரைப்படம் “ஹேராம்.” திரைப்படம் காந்தியை கொலை செய்ய செல்லும் சாகேத் ராம் என்பவரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இதில் இந்திய சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம், சுதந்திர இந்தியாவில் பிரிவினையின் போது நடந்த கலவரங்கள் என பல விஷயங்களை காட்டியிருப்பார் கமல்ஹாசன். படம் ரிலீசான போது வெற்றி பெறாத நிலையில் அதன் பின் படத்தின் ரசிகர்கள் அதிகமானார்கள். இன்றளவும் விவாதிக்கப்படும் படமாக இருக்கும் “ஹேராம்” திரைப்படத்தை இப்போது நல்ல தரத்துடன் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தங்கள் யூடியூப் பக்கத்தில் ரிலீஸ் செய்துள்ளது.