ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பிய விஜய் ரசிகர்!

Filed under: சினிமா |

“ஜெயிலர்” திரைப்படம் இன்று உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் திரைப்படத்தைப் பார்க்க வந்த விஜய் ரசிகர் ரஜினிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் ரஜினி ரசிகர்கள் அவரை தாக்கினர்.

சென்னையிலுள்ள வெற்றி தியேட்டரில் காலை 9 மணிக்கு “ஜெயிலர்” படத்தைப் பார்க்க ரசிகர்கள் குவிந்தனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ரஜினி ரசிகர்கள் முதல்நாள் முதற்காட்சியை காண ஆர்வத்துடன் தியேட்டருக்குள் சென்றனர். இப்படத்தைப் பார்க்க இதே தியேட்டருக்கு விஜய் ரசிகர்களும் வந்துள்ளனர். இப்படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்போதே விஜய் ரசிகர்கள் “ரஜினி ஒழிக” என்று கோஷம் எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இப்படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த விஜய் ரசிகரை அங்கு காத்திருந்த ரஜினி ரசிகர்கள் சரமாரியாக தாக்கினர். இதையடுத்து, விஜய் ரசிகர்கள் ஆறுபேர் ஒன்று சேர்ந்து விஜய் ரசிகரை தாக்கிய ரஜினி ரசிகர்களை தியேட்டரைச் சுற்றித் தேடி வந்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.