ரஜினியோடு லோகேஷ் இணைவாரா?

Filed under: சினிமா |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

இத்திரைப்படத்துக்குப் பிறகு லோகேஷ், இப்போது விஜய் நடிப்பில் “லியோ” படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்கவுள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. அங்கு மோசமான வானிலை நிலவினாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி முடித்தனர். இப்போது சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. தற்போது ரஜினிகாந்தை லோகேஷ் இயக்கப் போவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. மேலும் இது ரஜினி நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை தயாரிக்க “மாஸ்டர்” மற்றும் “லியோ” திரைப்படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.