ரஜினி படத்தில் “பாகுபலி” வில்லன்!

Filed under: சினிமா |

ரஜினிகாந்த் “ஜெயிலர்” திரைப்படத்தின் ரெக்கார்ட் பிரேக்கிங் வசூலுக்குப் பிறகு த.செ.ஞானவேல் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது. கடந்த மாதமே தொடங்க வேண்டிய இந்த படம் லைகாவின் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இன்னும் தொடங்கப்பட வில்லை எனத் தெரிகிறது.

இப்போது செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இத்திரைப்படத்தில் நானி நடிக்க இருந்த ஒரு பாத்திரத்தில் இருந்து வெளியேறி விடவே, அவருக்கு பதில் ஷர்வானந்த் நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அந்த வேடத்தில் நடிகர் ராணா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஒரு முக்கிய வேடத்தில் துஷாரா நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.