லோகேஷ் கனகராஜ் இப்போது விஜய் நடிப்பில் “லியோ” திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. அங்கு மோசமான வானிலை நிலவினாலும் படக்குழு அங்கேயே தங்கி இப்போது ஷூட்டிங்கை நடத்தி முடித்தனர். இப்போது சென்னையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது. லோகேஷ், ரஜினி நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும் இது ரஜினி நடிக்கும் கடைசி படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இப்படத்தை தயாரிக்க மாஸ்டர் மற்றும் லியோ படங்களின் தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க அதிக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் சன் பிக்சர்ஸ், தில் ராஜு, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், ஹோம்பாலே பிலிம்ஸ் என பல மொழி தயாரிப்பாளர்களும் லோகேஷை நச்சரிக்கிறார்களாம். இதனால் லோகேஷின் சம்பளத்தை எக்கச்சக்கமாக ஏற்றிவிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.