ரஹ்மான் பிரபுதேவா இணையும் படத்தின் பெயர் இதுவா?

Filed under: சினிமா |

பிரபுதேவா ஏ ஆர் ரஹ்மான் கூட்டணி தமிழ் சினிமாவின் வெற்றிக் கூட்டணிகளில் ஒன்று என்றே கூறலாம். இவர்கள் கூட்டணியில் உருவான “காதலன்,” “லவ் பேர்ட்ஸ்,” “மிஸ்டர் ரோமியோ,” “மின்சாரக் கனவு” உட்பட பல படங்களின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட்டாகி இன்றளவும் கொண்டாடப்படுகின்றன. “ஜெண்டில்மேன்” படத்தில் “சிக்கு புக்கு ரயிலே” பாடலுக்கு பிரபுதேவா நடனம் ஆடியிருந்தார்.

1999ம் ஆண்டு இருவரும் கடைசியாக “மின்சாரக் கனவு” படத்தில் இணைந்து பணியாற்றினர். அதன் பிறகு 25 ஆண்டுகளுக்குப் பின் இக்கூட்டணி இப்போது 6வது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தை பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மனோஜ் என் எஸ் இயக்குகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் மே 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இப்போது படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. படத்துக்கு ‘மூன்வாக்-னீஷீஷீஸீஷ்ணீறீளீ’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. “மூன்வாக்“ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதால் கண்டிப்பாக படம் நடனம் சம்மந்தப் பட்டத்தாகதான் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.