காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த 7ம் தேதி முதல் கன்னியாகுமரியில் இருந்து ஒற்றுமை நடைப்பயணத்தை தொடங்கினார். இந்த பாதயாத்திரை கூட்டத்தில் புகுந்த பிக்பாக்கெட்டுகளின் கைவரிசையால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தற்போது கேரளாவில் இந்த ஒற்றுமை நடைபயணம் நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை சென்ற பகுதியில் பிக்பாக்கெட் சம்பவங்கள் அதிகமாக உள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குற்றம் நடந்த இடங்களில் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்ததில் 4 பேர் கொண்ட கும்பல் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர்கள் யாத்திரையில் பங்கேற்கவில்லை என்பதும் கூறப்படுகிறது. பிக்பாக்கெட் சம்பவங்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். எனவே ராகுல் காந்தியின் பாதயாத்திரை நடை பயணம் செய்பவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.