குஜராத் உயர்நீதிமன்றத்தில் முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
முன்னாள் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பிரதமர் மோடி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதோடு, அவருடைய எம்பி பதவியும் பறிக்கப்பட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்த நிலையில் மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் மேல்முறையீடு செய்கிறார். அதுமட்டுமின்றி அவருடைய இரண்டு ஆண்டு சிறை தண்டனை சூரத் அமர்வு நீதிமன்றத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.