“ராங்கி” திரைப்படத்தின் டிரெயிலர்!

Filed under: சினிமா |

நடிகை திரிஷா “பொம்பளைய கதற வைக்க ஆம்பளையா இருந்தா மட்டும் பத்தாது” என்று பேசும் வசனத்துடன் கூடிய டிரெயிலர் தற்போது வெளியாகி உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள “ராங்கி” திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கடந்த சில ஆண்டுகளாக நிலையில் தற்போது தான் அந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30ம் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று முன் இத்திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி உள்ளது. இந்த டிரெய்லரில் திரிஷாவின் அதிரடி காட்சிகள் உள்பட பல ஆக்சன் காட்சிகள் இருப்பதாக ஆக்சன் பிரியர்களுக்கு இப்படம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. “எங்கேயும் எப்போதும்” என்ற படத்தை இயக்கிய சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் கதையை அர்.முருகதாஸ் எழுதியுள்ளார். படத்திற்கு சி. சத்யா இசையமைத்துள்ளார்.