முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆடு, மாடு தவிர அனைத்தையும் கொடுத்தனர் என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஈரோடு இடைத்தேர்தலில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவன் சுமார் 60 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுகவின் வெற்றி குறித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விருது நகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த விழா ஒன்றில் பேசிய போது, “திமுக ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகள் ஆகியும் அறிவித்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஈரோடு இடைத்தேர்தலில் ஆடுமாடு தவிர மற்ற அனைத்தையும் வாக்காளர்களுக்கு கொடுத்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது” என்று கூறியுள்ளார்.