கடந்த பல தசாப்தங்களில் அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்களின் மிகப்பெரும் கூடுகையாக வரும் திங்கள்கிழமை (செப். 19) நடைபெறவுள்ள ராணியின் இறுதிச்சடங்கு அமைய உள்ளது.
இறுதிச் சடங்குக்கான அழைப்பிதழ்கள் சென்ற வார இறுதியில் பல தரப்பினருக்கும் சென்றுள்ள நிலையில், சுமார் 500 அரசு தலைவர்கள் மற்றும் முக்கியப் வெளிநாட்டு பிரமுகர்கள் நிகழ்வில் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பான்மையான தலைவர்கள் வணிக விமானங்களில் வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவர்கள் மேற்கு லண்டனில் உள்ள ஓரிடத்தில் இருந்து பேருந்துகள் மூலம் மொத்தமாக அழைத்துச் செல்லப்படுவார்கள். இறுதிச்சடங்கு நடைபெறவுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபே-யில், சுமார் 2,200 பேர் அமரும் வகையிலான இடவசதி உள்ளது.
ஐரோப்பிய அரச குடும்பத்தினர், அமெரிக்க அதிபர், முன்னாள் அதிபர்கள், காமன்வெல்த் தலைவர்கள்,
மற்ற உலக நாடுகளின் தலைவர்கள் ஆகியோர்கள் பங்கேற்பதாக கூறப்படுகிறது. ரஷ்யா, பெலாரூஸ், மியான்மர் ஆகியவற்றிலிருந்து யாருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என, பிபிசியின் செய்திக் குறிப்பில் கூறப்படுகிறது.