பெண் மருத்துவர் ஒருவர் ரஷ்யா இராணுவத்தில் பாலியல் அடிமைகள் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ரஷ்ய ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றிய பெண் மார்கரிட்டா ஐரோப்பிய ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றும் பெண்கள் ராணுவ வீரர்கள் மனைவிகளாக பயன்படுத்தி வருகின்றனர். உயர் பதவியில் வகிக்கும் பெண்கள் முதல் சமையல், தூய்மை வேலை செய்யும் பெண்கள் வரை பாலியல் கொடுமை நடைபெற்று வருகிறது. இதை எதிர்க்கும் பெண்களுக்கு கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படும். பல பெண்கள் ராணுவ வீரர்களுடன் ஒன்றாக படுக்க கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர், இதற்கு சம்மதிக்காத பெண்களை நிர்வாணப்படுத்தி குளிர்ந்த பாதாள அறைகளில் எலிகளுடன் ஒன்றாக விட்டுவிடுவார்கள்” என்று அவர் இக்கருத்து பெரும் சர்ச்சை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.