ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்கிறதா அதிமுக?

Filed under: அரசியல்,இந்தியா,தமிழகம் |

ஜெயக்குமார் ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்த கேள்வி குறித்து அவர் பதிலளித்துள்ளார்.

வரும் 22ம் தேதி அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. இந்த கோவில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள நாடு முழுவலும் உள்ள அரசியல் தலைவர்களுக்கு ஆன்மீக தலைவர்களுக்கும் சினிமா பிரபலங்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் இவ்விழாவில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தமிழகத்தை பொறுத்தவரை அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த கேள்விக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறும்போது, “அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. ஆனால் அதில் பங்கேற்பதா வேண்டாமா என்பதை தலைமை தான் முடிவெடுக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்