“இந்தியன் 2” திரைப்படத்தை கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கி தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீசாகவில்லை.
படப்பிடிப்புத்தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததையடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அந்த பிரச்சனைகளை எல்லாம் கடந்து, தற்போது படத்தை இயக்கி வருகிறார் ஷங்கர். சமீபத்தில், படத்தின் ஷூட்டிங் தென் ஆப்பிரிக்கா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் நடந்தது. இந்த ஷூட்டிங் முடிந்ததும் இந்தியா திரும்பும், ஷங்கர் வரும் 23ம் தேதி முதல் ஐதராபாத்தில் ராம்சரண் நடிக்கும் “கேம்சேஞ்சர்” திரைப்படத்தின் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கவுள்ளாராம்.