“ராவண கோட்டம்” டிரையிலர்!

Filed under: சினிமா |

நடிகர் சாந்தணுவின் “ராவண கோட்டம்” டிரையிலர் தற்போது வெளியாகி உள்ளது.

8 ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் “மதயானைக் கூட்டம்” திரைப்படம் வெளியானது. தற்போது அவர் தனது அடுத்த படத்தை முடித்துள்ளார். படத்திற்கு “இராவண கோட்டம்” என்ற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் நாயகனாக இயக்குனர் கே.பாக்யராஜின் மகன் சாந்தணு நடிக்கவுள்ளார். சினிமாவில் 15 ஆண்டுகளுக்கும் மேல் சாந்தணுவால் ஒரு வெற்றியைப் பெற முடியவில்லை. இப்படத்தை பெரிதும் நம்பி அவர் கடின உழைப்பை செலுத்தி நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விரைவில் ரிலீசாக உள்ள படத்தின் டிரையிலர் இன்று வெளியாகியுள்ளது. “ராவணக் கோட்டம்” திரைப்படத்தின் புதிய போஸ்டரும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.