ரி ரிலீசாகும் “இந்தியன்”!

Filed under: சினிமா |

கமல்ஹாசன் நடிப்பில் அடுத்தடுத்து இந்தியன் 2, இந்தியன் 3, கல்கி மற்றும் தக் லைஃப் என வரிசையாக படங்கள் வெளியாக உள்ளன. இதில் இந்தியன் 2 பாகங்களின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகின்றன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக உருவாக்கத்தில் இருந்த இந்தியன் 2 திரைப்படத்துக்கான ரிலீஸ் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. ஜூன் மாதத்தில் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 13ம் தேதியை படக்குழு இறுதி செய்துள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் “இந்தியன் 2” படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் விதமாக இந்தியன் முதல் பாகத்தை மே 30ம் தேதி ரி ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவரின் “கில்லி” திரைப்படம் சமீபத்தில் ரி&ரிலீஸ் செய்யப்பட்டு வசூலை அள்ளியுள்ளது. தன்னுடைய ஹிட் படங்களை எல்லாம் ரி &ரிலீஸ் செய்ய ஏ.எம்.ரத்னம் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் முதலில் “இந்தியன்” படத்தை ரிலீஸ் செய்ய உள்ளாராம்.