ரெட் அலர்ட்டாக மாறும் கோவை.! தாய்லாந்து தொடர்பால் தொற்று அதிகரிப்பு!!

Filed under: தமிழகம் |

வே. மாரீஸ்வரன்

கோவை : கடந்த மார்ச் 21 முதல் 24 வரை டெல்லியில் சர்வதேச இஸ்லாமிய மாநாடு நடந்தது. இதில், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில் கோவை, அன்னூர், மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி, பகுதிகளைச் சேர்ந்த சுமார் 82 பேர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு திரும்பி வந்தனர்.டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய கருத்தரங்கில் பங்கேற்று விட்டு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கு சென்ற தாய்லாந்து சுற்றுலா பயணிகள் மூலமே பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இவர்கள் வாயிலாக கோவை மற்றும் ஈரோடு மாவட்டத்தில் சமூக பரவல் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ESI மருத்துவமனையை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் ராஜாமணி

கோவை மாவட்டத்தில் 29/3 /2020 வரை கொரோனா அறிகுறியுடன் கோவை சிங்காநல்லூர் பகுதியிலுள்ள இ எஸ் ஐ மருத்துவமனையில் சுமார் 8 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதாவது ( 30/3/2020 ) அன்று ஒரே நாளில் 30-க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் கலந்துகொண்ட 82 பேரில் நோய் அறிகுறி தென் பட்டவர்களுக்கு நேற்று சளி மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மூன்றில் ஒரு பங்கினருக்கு பாதிப்பு உறுதியானதாக தகவல் கசிந்துள்ளது. அதனடிப்படையில் கோவை மாவட்ட நிர்வாகம் மேட்டுப்பாளையம், ஆனைமலை, பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் தூய்மை பணிகளை முழு வீச்சில் முடுக்கி விட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி கோவையில்  கொரோன்னா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை முன்பு உறுதி செய்ய ப்பட்ட ஆறு பேரையும் சேர்த்து முப்பதை தாண்டும் என அஞ்சப்படுகிறது. சிலருக்கு இன்று மேற்கொள்ளவுள்ள பரிசோதனையில் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.கோவை மாநகர பொதுமக்கள் வீடுகளுக்குள் கட்டுப்படவில்லை எனில் பெரிய இழப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதே தற்போதைய நிலை.

ஆகையால் ரெட் அலார்ட் ஆகவே சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய  கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி, டெல்லி கருத்தரங்கிற்கு சென்று திரும்பிய 82 பேரில் நோய் அறிகுறி உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. பெரும்பாலானோருக்கு நோய்தொற்று உள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. மேட்டுப்பாளையம், ஆனைமலை, பொள்ளாச்சி, உள்ளிட்ட நோய் அறிகுறியுடன் இருந்தவர்கள் தங்கியிருந்த பகுதிகளில் முழுமையாக கிருமிநாசினி அடிக்கப்பட்டு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். மேட்டுப்பாளையம் சந்தை வேறு இடங்களுக்கு மாற்றப்படுகிறது. பொதுமக்கள் வீடுகளில் கட்டுப்பட்டு இருக்க வேண்டியது அவசியம் என்றார்.