ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனம். இந்நிறுவனம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலினின் நிறுவனம் ரெட் ஜெயிண்ட் மூவிஸ். நிறுவனத்தின் சார்பில் விஜய்யின் “குருவி,” சூர்யாவின் “ஆதவன்” உட்பட பல படங்களை தயாரித்துள்ளார். சமீபத்தில், கமல் தயாரித்து நடித்த “விக்ரம்“ படத்தை உதயநிதியின் ரெட் ஜெயிண்ட் நிறுவனம் திரையரங்குகளில் வெளியிட்டிருந்தது. இப்படத்திற்கு நல்ல வசூல் குவித்ததையடுத்து, கமல் மற்றும்- ஷங்கர் கூட்டணியில் உருவாகிவரும் “இந்தியன் 2” படத்தைத் தயாரிக்கவுள்ளதாக உதய நிதி தெரிவித்தார். இப்படம் சம்பந்தமாக அமெரிக்கா சென்றுள்ள கமல், அங்கு மேக்கப் மேனை சந்தித்துப் பேசினார். எனவே இப்படம் சம்பந்தமாக புதிய அறிவிப்பு வெளியாகலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனம் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், இன்று நள்ளிரவு 12:1 க்கு புதிய அறிவிப்பை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. ஒருவேளை “இந்தியன்- 2” படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் அல்லது வேறு எதாவது படத்தின் அறிவிப்பாக இருக்கலாம் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.