புதிதாக ரேசன் அட்டைகள் விண்ணப்பித்தவர்களுக்கு மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு வழங்கப்படும் என்று உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசின் உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் புதிதாக ரேசன் அட்டை பெற 2 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருப்பதாகவும், மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை பெற ரேசன் அட்டை அத்தியாவசிய சான்றாக உள்ளது என்பதால் மக்களவை தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் ரேசன் அட்டைகள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜுலை மாதம் முதல் புதிய ரேசன் அட்டை வழங்குவது நிறுத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் ரேசன் அட்டைக்காக காத்திருக்கின்றனர்.